61
மருத்துவமனையில் இறந்ததாகக் கூறப்படும் சிசுவை அடக்கம் செய்வதற்காக மயானத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது, குழந்தை திடீரென எழுந்து அழத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பிரசவ வலியில் இருந்த பெண்ணை அவரது கணவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தாயாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.