அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அதன்பின் உடல்நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்ந்து வந்தார். இதையடுத்து நேற்று முன் தினம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.
ஏற்கனவே, செந்தில்பாலாஜி ஜாமின் மனு கேட்டு நீதிமன்றத்தில் பல முறை முறையிட்டிருந்தார். ஆனால், அவர் அமைச்சராக நீடிப்பதால் வெளியில் வந்து சாட்சிகளை அழிக்கலாம் என்ற காரணத்தினால் ஜாமின் மறுக்கப்பட்டு வந்தது.
தற்போது அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், ஜாமின் கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.