Home » “இதுதான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம்” – தமிழக முதல்வர்!

“இதுதான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம்” – தமிழக முதல்வர்!

by namthesamnews
0 comment

தர்மபுரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் சென்றுள்ள நிலையில் ‘மக்களுடன் முதல்வர் திட்டம்’ தமிழக முதல்வரால் தர்மபுரியில் உள்ள ஊரகப் பகுதிகளில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நிகழ்வாக 445 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி – திருவண்ணாமலையில் நான்கு வழிச் சாலை, அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற பணிகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். பெண்களுக்கான 20 பேருந்துகளையும் தமிழக முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார். 56 கோடி ரூபாய் மதிப்பில் 2,637 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் வழங்கவுள்ளார்.

தொடர்ந்து தர்மபுரியில் திட்டங்களை துவக்கி வைத்த பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், ”ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள் இருக்கக்கூடிய எல்லா காரியங்களையும் நிறைவேற்றிக் காட்டுவேன் என்று சொன்னேன். உங்கள் முன்னாடி அந்தப் பெட்டியை பூட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் பாதுகாப்பாக வைத்தோம்.

உடனடியாக எதிர்க்கட்சிகள் என்ன பேசினார்கள் ‘இவர்கள் ஆட்சிக்கும் வரப்போவதில்லை; இந்த பெட்டியையும் திறக்கப் போவதில்லை’ என்று இறுமாப்பில் கேலி செய்தார்கள், கிண்டல் செய்தார்கள். ஆனால் பொதுமக்களாகிய நீங்கள் திமுக மேல், என் மேல் நம்பிக்கை வைத்து அந்த கேலி மனிதர்களை தோற்கடித்து எங்களுக்கு பெரிய வெற்றியை தேடித் தந்தீர்கள்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்ற ஒரு புதிய துறையை உருவாக்கினோம். பொது மக்களுடைய கோரிக்கைகள் எந்த இடத்திலும் எங்களுடைய பார்வையில் இருந்து தவறி விடக்கூடாது என்பதற்காகத் தான் இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தோம்.

முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்படக்கூடிய மனுக்கள் மட்டுமல்லாமல், இணையதளம், அஞ்சல், சமூக வலைத்தளம், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுக்கப்படும் மனுக்கள் இப்படி எல்லாம் மனுக்களையும் ஒரே இடத்தில் போய் சேருகிறது. மக்களால் தரப்படும் அனைத்து மனுக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தோம்.

எல்லா மக்களின் கோரிக்கைகளும் தலைமைச் செயலகத்திற்கு வந்து விட்டது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் ‘முதல்வரின் முகவரி’ துறையின் கீழ் இப்பொழுது வரைக்கும் பெறப்பட்ட 68,30,281 மனுக்களில் 66,65,304 மணிகளுக்கு உரிய முறையான தீர்வு கண்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தோல்வியை கண்ட பிறகும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்பட வேண்டும். அனைவர் வீட்டிற்கும் ஏதோ ஒரு வகையில் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பணியாற்றி வருகிறோம். எல்லோருக்குமான அரசாக இருப்பது தான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம்” என்றார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00