நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பு, பல வீடியோக்கள் அவருக்கு எதிராக வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், தற்போது நடிகர் அஜித்தின் பழைய பேட்டி வீடியோ ஒன்று X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
அதில், அஜித் அரசியல் குறித்து பேசுகையில், ” நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று அனைவரும் அரசியலுக்கு வந்தால் அது சரியாக இருக்காது. நாம் அனைவரும் நமது கடைமையை சரியாக செய்தாலே அனைத்தும் சரியாகும். அனைவரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், எந்த பிரச்சனையும் இருக்காது” என கூறியுள்ளார்.
இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் மற்றும் பிற அரசியல் கட்சியினர் X தளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்பு நடிகர் அரவிந்த்சாமி நடிகர்கள் என்றால் அவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்பது கட்டாயமில்லை என பேசிய வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
நாடு நல்லாருக்கணுமுன்னு " எல்லாரும் அரசியலுக்கு வந்தா?"
@iamsanthanam #ActorAjithKumar #AjithKumarLatestSpeech #AjithPoliticalSpeech #JayaTv pic.twitter.com/m00VChXc8r— Jaya TV (@JayaTvOfficial) February 4, 2024