மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023 ஜனவரி மற்றும் நவம்பர் இடையே வாகன பதிவு 23.3% ஆக அதிகரித்தது தெரியவந்துள்ளது.
அதன்படி 2022 ஆம் ஆண்டில் 19,218 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 2023 இல் 23,698 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை மோட்டார் சைக்கிள் பதிவும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் பதிவுகள் 8,363 ஆக இருந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு 16,869 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வருடம் 636 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.