பிக்பாஷ் லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில், ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி மேத்யூ வேட் (63), பென் மெக்டெர்மாட் (50) ஆகியோரின் அதிரடியால் 187 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில், கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக 32 (18) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் பியூ வெப்ஸ்டர் இருவரும் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
ஆனால் ஸ்டோய்னிஸ் 48 (32) ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் மெல்போர்ன் அணி 180 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இறுதிவரை வெற்றிக்காக போராடிய வெப்ஸ்டர் 55 ரன்கள் விளாசினார். தோல்வி காரணமாக மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறியது.