Home » விபத்தில் சிக்கிய எம்பி கார்! மருத்துவமனையில் அனுமதி

விபத்தில் சிக்கிய எம்பி கார்! மருத்துவமனையில் அனுமதி

by Vaishnavi S
0 comment

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதால், ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 1 மணியளவில், புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி அலி சப்ரி ரஹீம் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, புத்தளம் – அனுராதபுரம் வீதியின்  15 ஆம் தூண் பிரதேசத்தில் கார் எதிர்பார்தவிதமாக விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில், அளுத்கம மேல் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த எச்.எம். ஹர்ஷன பிரதீப் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நேரத்தில் உழவு இயந்திரத்தை எச்.எம். ஹர்ஷன பிரதீப் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, அந்த இயந்திரத்தின் பின்புறம் எம்பி கார் மோதியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எம்பியின் கார் டிரைவர் சாலிய கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00