Home » Chelsea அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற Liverpool

Chelsea அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற Liverpool

by Vaishnavi S
0 comment

Carabao கோப்பை இறுதிப்போட்டியில் வென்று Liverpool அணி சாம்பியன் ஆனது.

Wembley மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு அணி வீரர்களும் சம பலத்துடன் மோதினர்.

இருதரப்பிலும் அடிக்கப்பட்ட கோல் முயற்சிகள் அனைத்தும் தடுக்கப்பட்டன. இதனால் முதல் பாதி கோல் இன்றி முடிந்தது.

அதன் பின்னரான இரண்டாம் பாதியின் 60வது நிமிடத்தில், Free kickயில் இருந்து வந்த பந்தை Liverpool வீரர் Virgil van Dijk தலையால் முட்டி கோலாக்கினார்.

Soccer Football – Carabao Cup – Final – Chelsea v Liverpool – Wembley Stadium, London, Britain – February 25, 2024 Liverpool’s Virgil van Dijk scores their first goal Action Images via Reuters/Paul Childs

ஆனால், மூன்றாம் நடுவர் Check செய்தபோது அது offside goal என தெரிய வந்தது. இதனால் அணி வீரர்களும், ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.

ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் இரண்டு முறை தன்னிடம் வந்த பந்தை Liverpool கோல் கீப்பர் அபாரமாக செயல்பட்டு தடுத்தார்.

இதனைத் தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 118 நிமிடங்கள் போராட்டத்திற்கு பிறகு Liverpool அணிக்கு கோல் கிடைத்தது.

கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை, Virgil van Dijk மின்னல் வேகத்தில் தலையால் முட்டி கோல் அடித்தார். அதுவே அந்த அணியின் வெற்றி கோலாக அமைந்தது.

இதன்மூலம் Liverpool அணி Carabao கோப்பையை வென்று சாம்பியன் ஆனது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00