Home » Lens அணியை புரட்டியெடுத்த எம்பாப்பேயின் PSG

Lens அணியை புரட்டியெடுத்த எம்பாப்பேயின் PSG

by Vaishnavi S
0 comment

லிகு 1 தொடரில் PSG அணி 2-0 என்ற கோல் கணக்கில் லென்ஸ் அணியை வீழ்த்தியது.

Paris Saint-Germain மற்றும் Lens அணிகள் மோதிய போட்டி Stade Bollaert-Delelis மைதானத்தில் நடந்தது.

PSG-யின் நட்சத்திர வீரர் எம்பாப்பே பாஸ் செய்த பந்தை, PSG வீரர் பிராட்லி பார்கோலா (Bradley Barcola) நேர்த்தியாக கடத்திச் சென்று கோலாக மாற்றினார்.

இதன்மூலம் ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் PSG க்கு முதல் கோல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, 45+3வது நிமிடத்தில் லென்ஸ் (Lens) அணி வீரர் ஜோனதன் கிராடிட் RED CARD வாங்கி வெளியேறினார்.

அவர் பந்தை கடத்திச் சென்ற PSG வீரர் பிராட்லி பார்கோலாவை, தன் காலால் தடுக்க அவர் கீழே விழுந்தார். இதனால் உடனடியாக கிராடிட் வெளியேட்டறப்பட்டார்.

இரண்டாம் பாதி விறு விறுப்பாக சென்ற நிலையில், கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) 89வது நிமிடத்தில் மிரட்டலாக கோல் அடித்தார்.

இதன்மூலம் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00