225
இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நேற்று(14) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பட்டதாரியான இவர், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராகவும் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
இதற்கு முன்னர் தேசிய அபிவிருத்தி வங்கி, துறைமுக அதிகார சபை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தலைவர் பதவி வகித்துள்ளார்.
மேலும் காவன் ரத்நாயக்க, கார்கில்ஸ் சிலோன் பி எல் சி நிறுவனம் மற்றும் டயலொக் நிறுவனம் ஆகியவற்றிலும் முக்கிய பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.