Home » சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Vaishnavi S
0 comment

இந்த ஆண்டு முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையில் மாத்திரம் 25,619 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலான பயணிகளான 5,060 பேர், ரஷ்யாவிலிருந்து வந்துள்ளதுடன், 3,333 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

மேலும், ஜேர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ். நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 14 லட்சத்து எண்பத்து ஏழாயிரத்து முன்னூற்று மூன்று சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 23 லட்சமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00