Home » பிரெஞ்சு கோப்பை போட்டியில் அதிர வைத்த எம்பாப்பே

பிரெஞ்சு கோப்பை போட்டியில் அதிர வைத்த எம்பாப்பே

by namthesamnews
0 comment

பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் US Orleans அணியை வீழ்த்தியது.

Stade de la Source மைதானத்தில் நடந்த பிரெஞ்சு கோப்பை கால்பந்து போட்டியில் PSG மற்றும் US Orleans அணிகள் மோதின.

ஆட்டத்தின் 16வது நிமிடத்திலேயே PSGயின் நட்சத்திர வீரர் கைலியின் எம்பாப்பே (Kylian Mbappe) அபாரமாக கோல் அடித்தார்.

இதற்கு US Orleans அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் PSG 1-0 என முதல் பாதியில் முன்னிலை வகித்தது.

அதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாம் பாதியில் PSG வீரர்கள் விஸ்வரூப ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

63வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் எம்பாபே கோல் அடிக்க, ராமோஸ் 72வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

 

US Orleans அணி வீரர் நிக்கோலஸ் செயின்ட் ரூப் 86வது நிமிடத்தில் கோல் அடிக்க 88வது நிமிடத்திலேயே PSG-யின் சென்னி மயூலு அசத்தலாக கோல் அடித்தது.

இதன்மூலம் PSG அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00