Home » எலான் மஸ்க் இலங்கை விஜயம்!

எலான் மஸ்க் இலங்கை விஜயம்!

by namthesamnews
0 comment

எலான் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை ஆரம்பிப்பதற்கு வசதியாக புதிய விதிமுறைகளை இலங்கை உருவாக்கவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உடன் இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தோனேசியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அத்துடன், அவரை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஏற்கனவே இலங்கையில் ஸ்டார்லிங்கை அறிமுகப்படுத்துவதற்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணப்பம் அனுப்பப்பட்டது.

இதன் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் தற்போது புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00