நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால், தமிழ்நாட்டில் எந்த காட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற விவாதம் கடந்த சில நாட்களாகவே சென்று கொண்டிருக்கிறது.
தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என தற்போது வரை கூட விஜய்யின் அரசியல் வருகை குறித்த பேச்சுதான் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், விஜய்யின் வருகை திமுகவுக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அரசிய விமர்சர்கள் கூறுகின்றனர். ஏனெனில், திமுகவின் வாக்கு வங்கியே சிறுபான்மையினர் வாக்குதான், இதை பிரிப்பதற்குதான் அதிமுக, பாஜக முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் வருகையால் சிறுபான்மையினர் வாக்கு அவருக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். அப்படி சிறுபான்மையினர் வாக்கு விஜய்க்கு நகர்ந்தால், திமுகவின் அஸ்திவாரத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு எனவும் எச்சரிக்கின்றனர்.