Home » ஆனந்த் அம்பானி திருமணத்தில் பிரபல இயக்குநர்

ஆனந்த் அம்பானி திருமணத்தில் பிரபல இயக்குநர்

by Vaishnavi S
0 comment

தமிழ் இயக்குநர் அட்லீ தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகனின் திருமண விழாவில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்தியில் 1000 கோடி வசூல் செய்த ஜவான் படத்தை கொடுத்த தமிழ் இயக்குநர் அட்லீ, தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டு திருமண விழாவில் அட்லீ தனது மனைவி மற்றும் மகனுடன் கலந்துகொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

இதுவரை தனது மகன் மீரின் முகத்தை வெளியுலகிற்கு அட்லீ காட்டாமல் இருந்தார். ஆனால் இந்த வீடியோ மூலம் மீரின் முகத்தை அனைவரும் பார்த்துள்ளனர்.

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்ட்டுக்கும் சூலை மாதம் திருமண நடைபெற உள்ளதால், ஜாம் நகர் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது.

பல்வேறு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள நிலையில் அட்லீயும் தனது குடும்பத்துடன் பங்கேற்றுள்ளார்.

முன்னதாக, ஆனந்த் அம்பானி தனது குடும்பத்துடன் 51,000 பேருக்கு விருந்து அளித்தது பெரிதளவில் பேசப்பட்டது

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00