Home » ரொனால்டோ இல்லாமலேயே மெஸ்ஸி அணிக்கு மரண அடி கொடுத்த அல் நஸர்!

ரொனால்டோ இல்லாமலேயே மெஸ்ஸி அணிக்கு மரண அடி கொடுத்த அல் நஸர்!

by namthesamnews
0 comment

இன்டர் மியாமி அணிக்கு எதிரான நட்புமுறை போட்டியில் அல் நஸர் அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இன்டர் மியாமி மற்றும் அல் நஸர் அணிகள் மோதிய Club Friendlies போட்டி கிங்டம் அரேனா மைதானத்தில் நடைபெற்றது.

ஆட்டத்தின் 3வது நிமிடத்திலேயே அல் நஸரின் Otavio முதல் கோல் அடித்து கணக்கை தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து ரொனால்டோவின் இடத்தை ஈடுசெய்யும் வகையில் தலிஸ்கா அசுர ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

அவர் 10வது நிமிடத்திலும், அல் நஸர் வீரர் ஐமெரிக் லபோர்டே 12வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

முதல் பாதி வரை இன்டர் மியாமி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறியது. இதனால் முதல் பாதியில் 3-0 என அல் நஸர் முன்னிலை வகித்தது.

ஆனால் இரண்டாம் பாதியிலும் இன்டர் மியாமி அணிக்கு இதே நிலை நீடித்தது.

தலிஸ்கா 51வது நிமிடத்தில் கோல் அடிக்க, அதனைத் தொடர்ந்து முகமது மரன் (68வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.

இன்டர் மியாமி அணி கோல் அடிக்க போராடிய நிலையில், 73வது நிமிடத்தில் தலிஸ்கா 3வது கோலை அடித்து மிரட்டினார்.

இறுதியில் அல் நஸர் அணி 6-0 என இமாலய வெற்றி பெற்றது.

காயம் காரணமாக விளையாடாத ரொனால்டோ, போட்டியை மைதானத்தில் களித்தார்.

அவர் தனது அணியின் வெற்றியை கொண்டாடிய வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00