இலங்கை கேப்டன் வணிந்து ஹசரங்கா டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ,இலங்கை கேப்டன் வணிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் அவர் டி20யில் 100 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார்.
மேலும், 63 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம், அதிவேகமாக இந்த சாதனையை படைத்த இலங்கை வீரர் எனும் பெருமையை பெற்றார்.
இதற்கு முன்பு இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா 100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்திருந்தார்.
ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டியவர் என்ற சாதனையை தன்னகத்தே வைத்துள்ளார்.