ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை இலங்கை அணி வென்றதைத் தொடர்ந்து, ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி 14ஆம் திகதி பல்லேகலவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன.
வரும் 17ஆம் திகதி இந்த தொடர் தொடங்க உள்ள நிலையில், மூன்று போட்டிகளும் தம்புலா மைதானத்தில் நடக்க உள்ளன.
இத்தொடருக்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிந்து ஹசரங்கா கேப்டனாகவும், சரித் அசலங்கா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி20 அணியில் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா இடம்பெற்றிருந்தாலும், ஒருநாள் தொடரின்போது ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் மீண்டு வருவதால் அவருக்கு பதிலாக பினுரா பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார்.
அணி விபரம்:
1. வணிந்து ஹசரங்கா (கேப்டன்)
2. சரித் அசலங்கா (துணை கேப்டன்)
3. பதும் நிசங்கா
4. குசால் மெண்டிஸ்
5. தனஞ்செய டி சில்வா
6. குசால் பெரேரா
7. ஏஞ்சலோ மேத்யூஸ்
8. தசுன் ஷானகா
9. சதீரா சமரவிக்ரமா
10. கமிந்து மெண்டிஸ்
11. மஹீஷ் தீக்ஷணா
12. அகில தனஞ்செய
13. மதீஷா பத்திரனா
14. தில்ஷன் மதுஷன்கா
15. நுவன் துஷாரா
16. பினுர பெர்னாண்டோ
17. துஷ்மந்தா சமீரா