வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி, டி20 கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்தார்.
அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது.
இதில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது.
சிக்ஸர் மழை பொழிந்து வாணவேடிக்கை காட்டிய கிளென் மேக்ஸ்வெல் சதம் விளாசினார்.
அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும்.
மேக்ஸ்வெலின் இந்த சதம் மூலம் அவர் டி20யில் அதிகமுறை 100 ரன்களுக்கு மேல் எடுத்த ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்தார்.
இருவரும் டி20 கிரிக்கெட்டில் 5 சதங்கள் விளாசியுள்ளனர்.
அதிக டி20 சதம் அடித்த வீரர்கள்:
கிளென் மேக்ஸ்வெல் – 5
ரோஹித் ஷர்மா – 5
சூர்யகுமார் யாதவ் – 4
பாபர் அசாம் – 3
காலின் மன்ரோ – 3
சபவூன் டேவிஸி – 3