தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த பில்லா ஜெகன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து விஜய் நிர்வாகிகளுடன் அடிக்கடி மீட்டிங், அறிக்கைகள் என தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால், தினமும் தமிழக வெற்றி கழகம் குறித்து ஏதேனும் ஒரு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், தற்போது விஜய் நேற்று(பிப்09) இரவு அதிரடி நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளார். அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக எஸ்.ஜே.சுமன் என்பவர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோது பில்லா ஜெகன் என்பவர் மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவர் தற்போது திமுகவில் இணைந்துவிட்டதால், மாவட்ட செயலாளராக எஸ்.ஜே.சுமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பில்லா ஜெகனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.