Home » அபுதாபிக்கு மரண அடி கொடுத்த லிவிங்ஸ்டன்!

அபுதாபிக்கு மரண அடி கொடுத்த லிவிங்ஸ்டன்!

by namthesamnews
0 comment

இன்டர்நேஷனல் லீக் டி20 போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி Sheikh Zayed மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய அபுதாபி அணி, அடில் ரஷீத் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக பெப்பர் 21 பந்துகளில் 32 ரன்களும், அலிஷான் 28 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர்.

ஷார்ஜா அணியின் தரப்பில் அடில் 4 விக்கெட்டுகளும், டென்லி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய ஷார்ஜா அணியில் கேப்டன் டாம் கொஹ்லரை 2வது பந்திலேயே ஜோ லிட்டில் வெளியேற்றினார்.

அதிரடியாக 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த லிவிங்ஸ்டன், இமாத் வாசிம் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து திக்வெல்லவும் 30 ரன்களில் இமாத் ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் கைகோர்த்த ஜோ டென்லி (18), மார்ட்டின் கப்டில் (13) இணை 13.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்ட வைத்தது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00