அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த, நடிகர் ரஜினிக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக வெற்றி கழகம் என நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி, அரசியலுக்காக சினிமாவில் இருந்து விரைவில் விலகிவிடுவேன் என கூறியிருந்தார்.
இதையடுத்து, அரசியல் கட்சி தொடங்கிய விஜய்க்கு, ரஜினி தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு, தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ளார் விஜய். அப்போது அரசியல் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள விஜய்க்கு ரஜினி சில அறிவுரைகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ஷாருக்கானும் தொலைபேசியில் விஜய்க்கு வாழ்த்து கூறியதாக கூறப்படுகிறது.