கட்சியின் பெயரை அறிவித்த பின்பு, இன்று(பிப்.04) நடிகர் விஜய் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடன் பணிவான வணக்கங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என தனது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு அரசியல் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.