நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
‘தமிழக வெற்றி கழகம்‘ என தனது கட்சியின் பெயரை விஜய் நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “நடிகர் விஜய்யை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலின் மூலம் எனக்கு கிடைத்த அருமையான அண்ணன். நேரடியாக பேசும்போது அன்பாக பேசக்கூடியவர். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கைகள் வரும்போது கட்சியின் நோக்கம் தெரியவரும்” என்றார்.