Home » Breaking Bad பாணியில் போதைப்பொருள் கடத்திய இந்திய தம்பதிக்கு சிறை

Breaking Bad பாணியில் போதைப்பொருள் கடத்திய இந்திய தம்பதிக்கு சிறை

by Vaishnavi S
0 comment

பிரித்தானியாவில் 7,374 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய இந்திய தம்பதிக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தம்பதி Arti Dhir (59), Kavaljitsinh Raijada (35). இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு 700 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்தியுள்ளனர்.

2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ‘Breaking Bad’ தொடர் பாணியில் இவர்கள் கோகோயின் ஏற்றுமதி செய்ததற்கான வழக்கில் சிக்கினர்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த NCA விசாரணையில் இந்த தம்பதி அவுஸ்திரேலிய சந்தையில் 57 பவுண்டுகள் மில்லியன் மதிப்புள்ள 514 கிலோகிராம் கோகோயின் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், Viefly Freight Services என்ற முன்னணி நிறுவனத்தைப் பயன்படுத்தி, உலகளவில் வணிக ரீதியாக மருந்துகளை அனுப்பும் அதிநவீன நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதனால் Arti Dhir – Kavaljitsinh Raijadaவுக்கு தலா 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2017ஆம் ஆண்டில் இந்த தம்பதியின் தத்து மகன் கோபால் செஜானி (11) கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.


அவனை காப்பாற்ற சென்ற ஹர்சுக் கர்தனி என்ற உறவினரும் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட Arti Dhir – Kavaljitsinh Raijada தம்பதி, ஆயுள் தண்டனை என்பது அவர்களின் மனித உரிமைகளை மீறும் என்று பிரித்தானிய நீதிமன்றங்களை நம்ப வைத்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00