Home » போர்னேமௌத் அணிக்கு மரண அடிகொடுத்த லிவர்பூல்

போர்னேமௌத் அணிக்கு மரண அடிகொடுத்த லிவர்பூல்

by Vaishnavi S
0 comment

பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் போர்னேமௌத்தை வீழ்த்தியது.

Vitality மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியின் முதல் பாதியில் கோல்கள் விழவில்லை.

லிவர்பூல் அணிக்கு போர்னேமௌத் (Bournemouth) வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்ததால் முதல் பாதி 0-0 என இருந்தது.

இரண்டாம் பாதியில் லிவர்பூல் (Liverpool) அணியின் Darwin Nunez, Diogo Jota ஆகியோர் மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

Darwin Nunez 49வது நிமிடத்தில் விரைவாக செயல்பட்டு முதல் கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, 70வது நிமிடத்தில் Diogo Jota அபார கோல் அடிக்க, அவரே 79வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை அடித்தார்.

இதற்கு பதில் கோல் அடிக்க போர்னேமௌத் கடுமையாக போராடியது. ஆனாலும், லிவர்பூல் அவர்களின் முயற்சிகளை முறியடித்தனர்.

ஆட்டத்தின் 90+3வது நிமிடத்தில் Darwin மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

இதன்மூலம், லிவர்பூல் 4-0 என்ற கோல் கணக்கில் போர்னேமௌத் அணியை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது.

புள்ளிப்பட்டியில் போர்னேமௌத் அணி 12வது இடத்திலும், லிவர்பூல் அணி முதலிடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00