Home » சிறுத்தைக்கு பயந்து மரத்தில் இரண்டு நாட்கள் இருந்த வயோதிபர்

சிறுத்தைக்கு பயந்து மரத்தில் இரண்டு நாட்கள் இருந்த வயோதிபர்

by Vaishnavi S
0 comment

காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச்சென்ற வயோதிபர் ஒருவர் சிறுத்தையிடம் இருந்து தப்பித்துக்கொள்ள மரத்தின் மீது ஏறிய நபர் 2 நாட்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மன்னம்பிட்டி – மாகந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மாகந்தோட்டை காட்டுப் பகுதியில் விறகு வெட்டச்சென்ற போது அங்கு இருந்த சிறுத்தையிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மரத்தின் மீது ஏறியுள்ளார்.

மேலும் அப்பகுதியில் சூழ்ந்த வெள்ளத்தால் இரண்டு நாட்களாகியும் அவர் மரத்திலேயே தங்கியிருந்துள்ளார்.

இதனையடுத்து இவர் பிரதேசவாசிகளின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00