Home » ஆஸி-க்கு எதிராக சிக்ஸர்களை பறக்கவிட்டு முதல் அரைசதம் அடித்த வீரர்

ஆஸி-க்கு எதிராக சிக்ஸர்களை பறக்கவிட்டு முதல் அரைசதம் அடித்த வீரர்

by Vaishnavi S
0 comment

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் ஆமீர் ஜமால் தன் முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது சிட்னியில் நடந்து வருகிறது.

முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 313 ரன்கள் குவித்தது.

ரிஸ்வான் 88 ரன்களும், ஆகா சல்மான் 53 ரன்களும் எடுத்து அவுட் ஆன நிலையில், ஆமீர் ஜமால் அதிரடியில் மிரட்டினார்.

ஒருநாள் போட்டி போல சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்ட ஆமீர், டெஸ்டில் தனது முதல் அரைசதத்தை அடித்தார்.

கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்த அவர் 97 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்தார்.

அவுஸ்திரேலியாவின் தரப்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.

கவாஜா 47 ரன்களும், வார்னர் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஸ்டீவன் ஸ்மித் 23 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00