அன்னையர் தினத்தையொட்டி, நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று (மே 12) அன்னையர் தின விழா கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் வாழ்ந்த மரியா ஜார்விஸ் என்பவரின் தாயன்பை அடியொட்டியே இந்த அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்னையர் தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
#MothersDay pic.twitter.com/47PBLgnFoh
— TVK Vijay (@tvkvijayhq) May 12, 2024
இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அன்பின் முழு உருவமாய்த் திகழ்ந்து குழந்தைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னையரை இன்று மட்டுமில்லை எந்நாளும் போற்றி வணங்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.