தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமான நடிகர் யோகிபாபு, தற்போது புகழின் உச்சியில் உள்ளார்.
காமெடியனாக மட்டுமின்றி, அவ்வப்போது சிறந்த கதையம்சம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறது. அப்படி இவர் தேர்வு செய்த நடித்த ‘மண்டேலா’ படம் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.
இதையடுத்து ஹீரோவாக யோகி பாபு நடிப்பில் பல படங்கள் வெளியானது. இதில் ஒரு சில படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது ‘கிடாயின் கருணை மனு’ பட இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கும் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடிக்கிறாராம். அவர் பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் ஆவர். படம் கிராமத்து கதை என்பதால் இதற்கு லவ்லின் சந்திரசேகர் நன்றாக இருப்பார் என இயக்குநர் தேர்வு செய்துள்ளார்.