மிச்சாங் புயலின் கோர தாண்டவம்! 5060 கோடி நிவாரண நிதி கேட்ட தமிழக முதல்வர்

மிச்சாங் புயலால் உண்டான சேதங்களுக்காக நிவாரணம் கோரி முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மிச்சாங் புயலானது வட தமிழகத்தில் மிக அதிக கனமழையை பெய்துவிட்டு சென்றுள்ளது.
சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 34செ.மீ அளவுக்கு மழையை கொட்டித் தீர்த்தது.
இதனால் சென்னையில் பல இடங்கள் தண்ணீர் சூழ்ந்தது.
இதனை தொடர்ந்து மேயர், அமைச்சர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் களம் இறக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இன்று இரண்டாம் கட்டமாக மழை வெள்ள மீட்பு பணிகளை ஆய்வு செய்தார்.
தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த முதல்வர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, மிச்சாங் புயலால் உண்டான சேதங்களுக்கு, இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் அளிக்குமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் 2, 3, 4 ஆகிய திகதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பெருமழை பெய்தது.
இதனால் சாலைகள், பாலங்கள் மற்றும் பொது கட்டிடங்கள் ஆகியவை பெரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பாக சென்னையில் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சேதங்களை கணக்கிடும் பணி துவங்கியுள்ளது என்றும், விரிவான சேத அறிக்கைகள் தயாரான பின்பு கூடுதல் நிதி கோரப்படும் என்று கூறப்படுகிறது.

Related posts

ATM மையத்திற்கு வந்தவரிடம் போலீஸ் கைவரிசை!

போலீஸ் கஸ்டடியில் சவுக்கு சங்கர்!

6 வயது சிறுவனை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்!