அவுஸ்திரேலியாவுக்கு தரமான பதிலடி கொடுத்த ரசல் – ரூதர்போர்டு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றியை பெற்றது.

Perth-யில் நடந்த கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது.

17 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து அணி தடுமாறியது.

அப்போது ரஸ்டன் சேஸ் அதிரடியாக 20 பந்தில் 37 ரன்களும், பௌல் 14 பந்தில் 21 ரன்களும் விளாசினர்.

அதன் பின்னர் பார்ட்டினர்ஷிப் அமைத்த ரசல் – ரூதர்போர்டு, அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்கள் குவித்தது. ரசல் 29 பந்தில் 7 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 71 ரன்களும், ரூதர்போர்டு 40 பந்தில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 67 ரன்களும் எடுத்தனர்.

அதன் பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களே எடுத்து தோல்வியுற்றது.

டேவிட் வார்னர் 49 பந்தில் 81 ரன்களும், டிம் டேவிட் 19 பந்தில் 41 ரன்களும் விளாசினர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷேப்பார்ட் மற்றும் சேஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஏற்கனவே தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!