இனி இவர்களுக்கும் ரூ.1000! வெளியானது தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள்

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-25ம் நீதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை அம்மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப்ரவரி 19) சற்று முன் தாக்கல் செய்தார்.

அதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்புகளில் இடம் பெற்ற முக்கிய அறிக்கைகளை இங்கு பார்ப்போம்.

➤அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசு வேலை

➤திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட ஆவீன் தொழிற்சாலைகளில் அதிநவீன தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும்

➤முதலமைச்சரின் இளைஞர் திருவிழா இனி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும்

➤திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை

➤சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.24,000 கோடி நிதி ஒதுக்கீடு

➤’சமூக பாதுகாப்புதுறை’, இனி ‘குழந்தைகள் நலன் துறை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

➤பழங்குடியினத்தவரை மேம்படுத்த ரூ.1,000 கோடி செலவில் தொல்குடி என்கிற திட்டம் கொண்டுவரப்படும்.

➤ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்

➤மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்

➤காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு

➤அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை

➤ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ₹2500 கோடி ஒதுக்கீடு

➤தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நியோ டைடல் பார்க். இதனால், 13,000 பேருக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு அறிவுப்புகள் உள்ளன.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!