இன்று உறவுகளால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள்!

கார்த்திகை மாதம் 23ம் நாள். 09 டிசம்பர், 2023. சனிக்கிழமையான இன்று காலை 10:10 வரை பூரட்டாதி அதன் பின்னர் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, வீண் செலவுகள் ஏற்படலாம். ஆதலால் சிக்கனத்துடன் செலவு செய்ய வேண்டும். கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தடங்கல்களை சுக்குநூறாக்குவீர்கள். எடுத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் வலம் வரும் நாள்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தினரிடம் அனுசரணையாக நடந்துகொள்ளுங்கள். பேசும் வார்த்தைகளை கவனத்துடன் பயன்படுத்துங்கள். பொறுமை மிகவும் தேவைப்படும் நாள்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். புதிய முயற்சிகள் வாழ்வில் ஏற்றத்தை தரும். வியாபாரத்தில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.
சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, எதிர்பாராத பணவரவு உண்டாகும். அரசாங்கம் மற்றும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படலாம்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே அன்பும், பாசமும் பெருகும். கடினமான உழைப்பை கோரும் நாள். வாகனத்தில் செல்லும் போது கவனத்துடன் செல்வ வேண்டும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, உறவினர்களால் சில சிக்கல்கள் வரலாம். உங்கள் புத்தி சாதூரியத்தால் அதை முடித்து காட்டுவீர்கள். வீண் செலவுகள் கையிருப்பை கரைக்கக் கூடும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, உறவினர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதால் கெடுதல் விளையாது. குடும்ப பொறுப்புகள் அலைச்சலை கொடுக்கும். தொழில் இயல்பாகவே நடக்கும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர்கள் மனவலியை தரக்கூடும். அரசாங்க காரியங்களில் சுணக்கம் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.
மீனம்:
மீன ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே சச்சரவுகள் வந்து போகும். உறவினர்கள் சங்கடங்களை ஏற்படுத்துவர். பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024