கொட்டித் தீர்க்கும் கனமழை.. தத்தளிக்கும் சென்னை!

மிச்சாங் புயலால் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கனமழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயலாக உருமாறி தற்போது கரையை கடக்கும் வகையில் நெருங்கி வருகிறது.
இப்புயலானது நாளை அதிகாலை ஆந்திராவின் நெல்லூர் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கடக்கும் போது பலமான காற்று வீசக்கூடும். பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 11,000 கன அடிக்கும் அதிகமான தண்ணீர் வரத்து இருப்பதால், 8000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புயலில் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை (டிசம்பர் 5) முதல் டிசம்பர் 8ஆம் திகதி வரையில் நடக்கவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும், தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மிச்சாங் புயல் பற்றி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

Related posts

ATM மையத்திற்கு வந்தவரிடம் போலீஸ் கைவரிசை!

போலீஸ் கஸ்டடியில் சவுக்கு சங்கர்!

6 வயது சிறுவனை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்!