விஸ்வரூப ஆட்டமாடிய ஹசரங்கா..பந்துவீச்சில் மிரட்டிய பத்திரனா

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தம்புலாவில் நடந்த இப்போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிசங்கா (6), குசால் மெண்டிஸ் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து தனஞ்செய டி சில்வா 24 ரன்களும், சமரவிக்ரமா 25 ரன்களும் விளாசினர்.

அசலங்கா 3 ரன்களில் வெளியேற வணிந்து ஹசரங்கா அதிரடியில் மிரட்டினார். அவர் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் விளாசினார்.

 

இதன்மூலம் இலங்கை அணி 160 ரன்கள் எடுத்தது. பரூக்கி 3 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் மற்றும் அஸ்மதுல்லா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இப்ராஹிம் ஜட்ரான் நிலைத்து நின்று ஆட, ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பத்திரனாவின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

ஜட்ரான் 55 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார். பத்திரனா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!