புது முயற்சிகளை தவிர்க்க வேண்டிய ராசிக்காரர்கள்!

மார்கழி மாதம் 1ஆம் நாள். 17 டிசம்பர், 2023. ஞாயிற்றுக்கிழமையான இன்று, காலை 7:57 வரை திருவாதிரை அதன் பின்னர் புனர்பூசம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உறவினர்கள் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ஆதலால் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, கடினமான உழைப்பை கோரும் நாள். வீண் அலைச்சல் அதிகரிக்கும். யாரிடமும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார்கள். வாகனத்தில் செல்லும் போது கவனமாக பயணிக்கவும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, அரசாங்க காரியங்கள் கைகூடும். பால்ய நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதால் நன்மையே வந்து சேரும். எதிர்பார்த்த காரியங்கள் இழுபறியாகும். பேசும் வார்த்தைகளை கவனத்துடன் பயன்படுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, உறவினர்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, உடன்பிறந்தவர்கள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். பேசும் பேச்சில் கவனமும், பொறுமையும் அவசியம். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தவிருங்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, உறவினர்களால் சில ஆதாயம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024