இந்த வருடம் கார்த்திகை மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு யோகம்!

கார்த்திகை மாதம் முருகனுக்கும், ஐயப்பனுக்கும் உகந்த மாதங்களாக மக்களால் போற்றப்படுகிறது.
மாலை அணிந்து, விரதம் இருந்து வழிபாடு செய்வது இம்மாதத்தில் நடக்கும்.
மேலும் குலதெய்வ வழிபாடுகள் நடைபெறும் மாதம் ஆகும்.
கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.
விருச்சிக ராசியில் சூரியன், புதன், செவ்வாய் ஆகியோர் சஞ்சரிப்பதால் 6 ராசிக்காரர்களுக்கு யோக திசை ஆரம்பிக்கிறது.
மேஷம்:
சூரியன், புதன், செவ்வாய் ஆகியோர் உங்கள் ராசியில் 8ஆம் இடத்தில் உள்ளார். அதனால் கடினமான உழைப்பை கோரினாலும் அதற்கான பலன் கைமேல் கிடைக்கும். குடும்பத்தினரால் வரவு அதிகரிக்கும். கணவன் மனைவியிடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.
ரிஷபம்:
சூரியன், புதன், செவ்வாய் ஆகியோர் 7ம் இடத்தில் உள்ளதால் வகிக்கும் பதவிகளில் உயர்வுகளை அடைவீர்கள். தொழில் வளரும். நீண்ட பயணம் சோர்வை தரும். பெண்களிடத்தில் அன்பாகவும், கனிவாகவும் இருக்க வேண்டும்.
மிதுனம்:
சூரியன், புதன், செவ்வாய் ஆகியோர் 6ம் இடத்தில் உள்ளதால், அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். சிறு பயணங்கள் செல்வீர்கள். வியாபாரம் விருத்தியாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்:
சூரியன், புதன், செவ்வாய் ஆகியோர் 5ம் இடத்தில் இருப்பதால், பூர்வீக சொத்துக்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் செய்பவர்கள் இடத்தில் நல்ல நட்பு உண்டாகும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அஷ்டம சனி இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்:
சூரியன், புதன், செவ்வாய் ஆகியோர் 4ம் இடத்தில் இருப்பதால், நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வை அடைவர். வாகனங்கள் வாங்கக்கூடும். குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்படலாம். கவனமுடன் இருக்க வேண்டும்.
கன்னி:
சூரியன், புதன், செவ்வாய் ஆகியோர் 3ம் இடத்தில் இருப்பதால், பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். மனதில் உல்லாசம் பொங்கும். சகோதரர்களிடம் சிறுசிறு வாக்குவாதம் ஏற்படலாம்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024