பயனர்களுக்கு Xiaomi நிறுவனம் எச்சரிக்கை

Xiaomi நிறுவனம் தனது பயனர்களுக்கு Display தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Liquid UV adhesive screen protectors-ஐ பயன்படுத்த வேண்டாம் என Xiaomi நிறுவனம் கூறியுள்ளது.

Screen Protectors ஆக இது பயன்படுத்தப்பட்டாலும், இதில் பிரச்சனைகள் உள்ளதாக Xiaomi நிறுவனம் எச்சரிக்கிறது.

Xiaomi மற்றும் Redmi ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும்போது, ஸ்மார்ட்போன்களில் எதிர்பாராத Restarts, Button malfunctions, Speaker disturbances மற்றும் Battery Cover-யின் லெதர் பிரித்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படுமாம்.

Protectorsயில் பயன்படுத்தப்படும் Liquid Adhesive ஸ்மார்ட்போன்களில் உள்ள Physical keys, Charging port, Speaker holes மற்றும் Battery cover உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் பல்வேறு கூறுகளுக்குள் ஊடுருவும் தன்மையை கொண்டுள்ளது.

இது ஸ்மார்ட்போனின் செயல்பாட்டை சமரசம் செய்து, ஸ்மார்ட்போனிற்கான Warranty-ஐ கெடுக்கிறது.

இதன் காரணமாக இந்த Protectors-ஐ தவிர்க்குமாறு பரிந்துரைத்துள்ள ஷாவ்மீ, Tempered Glass, Non-Temper அல்லது Electrostatic films போன்ற பாதுகாப்பான விருப்பங்களை கருத்தில் கொள்ளுமாறும் பயனர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இவற்றின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறனில் எந்தவித சமரசமும், பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!