பழைய அம்சங்கள் திரும்ப கொண்டு வரும் X: எலான் மஸ்க் அறிவிப்பு..

எலன் மஸ்க் தனது X தளமான சமூக வலைத்தளத்தில் பழைய அம்சங்களான தலைப்பு செய்திகளை புதிய விதமாக மீண்டும் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் Micro-blogging வலைத்தளமான X-ஐ (Twitter) வாங்கியதில் இருந்து அதிரடியாக பல மாற்றங்களை கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தற்போது பழைய அம்சங்களை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்துள்ளார்.
அதாவது, X தளத்தில் Headlines காண்பிக்கப்படும்.
URLகளுடன் தலைப்புகளை அகற்றுவது தளத்தின் அழகியலை மேம்படுத்துகிறது என்று மஸ்க் முன்பு கூறியதை அடுத்து தலைப்புச் செய்திகளைக் காட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில்,முன்னோட்டங்களில் மீண்டும் செய்தித் தலைப்புகளை X காண்பிக்கும்.
எனவே, தளத்தில் வரவிருக்கும் புதுப்பிப்பில் செய்தித் தலைப்புகள் (Headlines) முன்னோட்டங்களுக்குத் திரும்பும் என்று மஸ்க் அறிவித்தார்.
மேலும் ,URL கார்டின் படத்தின் மேல் தலைப்புச் செய்திகள் காட்டப்படும், ஆனால் படத்தின் மீது ஓரளவு மேல் எழுதப்பட்டிருக்கும் மற்றும் ஒவ்வொரு பிக்சலையும் (Pixel) திறமையாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை மஸ்க் வலியுறுத்தினார்.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!