இந்திய அணிக்கு எதிராக மோசமான சாதனை செய்த வீரர்

இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ், இந்திய அணிக்கு எதிராக அதிக முறை டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை செய்துள்ளார்.

ராஜ்கோட்டில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியுள்ளது.

இங்கிலாந்து அணியின் இன்னிங்சின்போது ஜோ ரூட் அவுட் ஆனதும், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினார்.

ஆனால் அவர் 4 பந்துகளில் டக்அவுட் ஆகி வெளியேறினார். குல்தீப் யாதவ் பந்துவீச்சில் LBW முறையில் ரன் எடுக்காமல் பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் பேர்ஸ்டோவ் அதிகமுறை இந்திய அணிக்கு எதிராக டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை செய்தார்.

இந்திய அணிக்கு எதிராக அதிக டக்அவுட் ஆன வீரர்கள்

ஜானி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து) – 8 (37 இன்னிங்ஸ்)

டேனிஷ் கனேரியா (பாகிஸ்தான்) – 7 (15 இன்னிங்ஸ்)

நாதன் லயன் (அவுஸ்திரேலியா) – 7 (40 இன்னிங்ஸ்)

ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) – 6 (52 இன்னிங்ஸ்)

மெர்வின் டில்லான் (வெஸ்ட் இண்டீஸ்) – 6 (15 இன்னிங்ஸ்)

ஷேன் வார்னே (அவுஸ்திரேலியா) – 6 (22 இன்னிங்ஸ்)

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!