பிரித்தானியா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்! ரிஷிக்கு முதல் அடி

பிரித்தானியாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ரிஷி சுனக்கின் கன்சர்வெட்டிவ் கட்சிக்கு அடி விழுந்துள்ளது.

பொதுத்தேர்தல் நெருங்குவதால், இங்கிலாந்தில் உள்ள வெல்லிங்பார், கிங்ஸ்வுட் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கலை தேர்வு செய்வதற்கான உள்ளாட்சி தேர்தல், இந்த பகுதிகளில் கடந்த 15ம் தேதி நடைபெற்றது.

இதில், கன்சர்வேடிவ் கட்சி இரண்டு இடங்களிலும் தோல்வியடைந்தது. லேபர் கட்சி இந்த 2 இடங்களையும் கைப்பற்றியது. பொதுத்தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த தோல்வி கன்சர்வெட்டிவ் கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ரிஷி சுனக்கின் கனசர்வெட்டிவ் கட்சி, பொதுத்தேர்தலில் பல இடங்களில் தோல்வியடையும் என கருத்துகணிப்புகள் வரும் நிலையில், இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ரிஷி சுனக்கிற்கு முதல் அடியாக பார்க்கப்படுகிறது.

கடந்த 14 ஆண்டுகளில் கன்சர்வெட்டிவ் கட்சி, மக்களின் செல்வாக்கால் பல இடங்களில் அபார வெற்றி பெற்றது. ஆனால், சமீபகாலமாக அந்த கட்சி தனது செல்வாக்கை இழந்து வருகிறது. செல்வாக்கை இழக்கும் அந்த இடங்களில் எதிர்க்கட்சியான லேபர் கட்சி தங்கள் கொடியை நட்டு வருகிறது. மேலும், கன்சர்வெட்டிவ் கட்சியின் கோட்டைகளையும் லேபர் கட்சி வரும் தேர்தலில் கைப்பற்ற வாய்ப்புள்ளதாம்.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!