சிம்பொனி நிறுவனத்தின் சுவரில் மாற்றப்படும் உலகின் முதல் ஏர் கூலர்!

இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் ஏர் கூலர், ஏசி, கூலிங் ஃபேன் போன்ற சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கம்மி விலையில் ஒரு பெஸ்டான சாதனத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அப்படி குறைந்த விலையில் உங்கள் வீட்டை குளுமைப்படுத்த உதவும் ஒரு புதிய குட்டி ஏசி போன்ற சாதனமாக வெளிவந்துள்ளது தான் இந்த வால் மவுண்ட் ஏர் கூலர் சாதனம். இது AC இல்லை.. சுவரில் மாட்டப்படும் ஒரு ஏர் கூலர் சாதனமாகும்.

குறைந்த விலையில் ஏசி வாங்க நினைத்து, ஏசி விலை கட்டுப்படியாகாத மக்களுக்கு, சிறந்த பட்ஜெட் தேர்வாக இந்த வால் மவுண்ட் ஏர் கூலர் திகழ்கிறது. இந்த ஏர் கூலர் சாதனம், இதுவரை யாரும் பார்த்திடாத புதிய வடிவமைப்பை பெற்றுள்ளது.

சுவற்றில் ஏசி போல மாட்ட கிடைக்கும் உலகின் முதல் வால் மவுண்ட் ஏர் கூலர் சாதனமே இது மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வால் மவுண்ட் ஏர் கூலர் சாதனத்தை, மிகவும் பிரபலமான ஏர் கூலர் பிராண்ட் ஆன சிம்பொனி  நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதை சிம்பொனி நிறுவனம், சிம்பொனி கிளவுட் என்ற பெயருடன் வெளியிட்டுள்ளது. இந்த சிம்பொனி கிளவுட் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட வால் மவுண்ட் ஏர் கூலர் சாதனமாகும். இது 57 கியூபிக் மீட்டர் அளவு கொண்ட அறையை குளுமைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சந்தையில் விற்பனை செய்யப்படும் சாதாரண ஏர் கூலர்கள் போல, இதில் வாட்டர் டேங்க் இன்பில்ட்டாக வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிம்பொனி கிளவுட் வால் மவுண்ட் ஏர் கூலர் எக்ஸ்டர்னல் வாட்டர் டேங்க் அம்சத்துடன் வருகிறது. அதாவது, உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி வைத்து, இந்த சாதனத்துடன் வழங்கப்படும் டியூபை அதனுள் வைத்தால் மட்டும் போதும்.

பக்கெட்டில் இருக்கும் தண்ணீரை இந்த டியூப் உறுஞ்சி, ஏர் கூலருக்கு வழங்கி, சில் காற்றை அறைமுழுக்க பரப்புகிறது. இந்த தண்ணீரை சாதனம் மறுசுழற்சி செய்கிறது என்பதனால், தண்ணீரும் அதிகமாக வீணாவதில்லை.

உங்கள் அறையின் ஜன்னல் மற்றும் கதுவுகளை திறந்து வைக்கும் பொழுது கூடுதல் சில் காற்றை உணர முடியும் என்கிறது சிம்பொனி நிறுவனம். குறிப்பாக இது ஏசியை விட குறைந்தளவு மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!