இலங்கையில் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

ஜா-எல பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் சிகிச்சையாளராக கடமையாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணையத்தில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு குறித்த பெண் ஏமாற்றியுள்ளார்.

சோயா பொருட்களை பொதி செய்வதற்கு அதிக தொகை தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு 59 பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

41 வயதுடைய சந்தேகநபர் கடவத்தை, சூரியகம பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவர் எனவும், நுகேகொட நாவல வீதியில் வாடகை அடிப்படையில் பெற்ற வீட்டில் வைத்து இந்த பாரிய மோசடியை செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக பிரமிட் திட்டமாக இந்த வியாபாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த சோயா பொருட்கள் பொதியிடுவதற்கு உயர்மட்டத்தில் இருப்பவர்கள் ஊடாக அதிக பணம் கிடைக்கும் எனவும் உறுதியளித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஏமாற்றுவதனை தொழிலாக இந்த பெண் செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!