நாதன் லயன் பந்துவீச்சில் சுருண்டு நியூசிலாந்து படுதோல்வி

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெல்லிங்டனில் நடந்த டெஸ்டில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 383 ரன்களும், நியூசிலாந்து 179 ரன்களும் எடுத்தன.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 164 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதன்மூலம் நியூசிலாந்து 369 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணியில் அரைசதம் கடந்த ரச்சின் ரவீந்திரா 59 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் ஓவரில் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து லயனின் மிரட்டலான பந்துவீச்சில் நியூசிலாந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதனால் அந்த அணி 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 172 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இறுதிவரை போராடிய டேர்ல் மிட்செல் 38 ரன்கள் எடுத்தார். அவுஸ்திரேலியா தரப்பில் லயன் 6 விக்கெட்டுகளும், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!