தொடரைக் கைப்பற்றுமா இலங்கை? இன்று 2வது டி20

இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், தற்போது டி20 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

 

இதில் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று 2வது டி20 போட்டி தம்புள்ளாவில் உள்ள ரங்கிரி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

ஏற்கனவே முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும். அதே சமயம் ஆப்கானிஸ்தான் அணி டி20யில் சிறப்பாக விளையாடி வருவதால், இந்த போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!