இளவரசர் ஹரியின் ஆசை நிறைவேறுமா?

பிரித்தானியா அரச குடும்பத்தில் இருந்து பிரிந்துள்ள இளவரசர் ஹரி, மீண்டும் அரச குடும்பத்திற்கு திரும்பி, நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு உதவ ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நடிகை மேகனை திருமணம் செய்தபின், இளவரசர் ஹரி கடந்த 2020ம் ஆண்டு அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து, அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இளவரசர் ஹரி அரண்மனைக்கு திரும்ப வேண்டும் என்ற பேச்சு எழுந்தது.

இதையடுத்து ஹரி, மன்னருக்கு உதவுவதற்காக மீண்டும் அரச குடும்பத்தில் இணைய ஆசைப்படுவதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவரின் ஆசையை பிரித்தானியா அரச குடும்பம் ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!