விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கரும்பு விவசாயி சின்னத்தை மீட்டெடுப்பாரா சீமான்?

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ-வாக தேர்வான புகழேந்தி மறைவை தொடர்ந்து ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்நிலையில் மாநில கட்சி அங்கீகாரம் பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம், மற்றும் உச்ச நீதிமன்றங்களில் முறையிட்டும் கரும்பு விவசாயி சின்னத்தை நா.த.க-வால் மீட்க முடியவில்லை. இந்நிலையில் ’மைக்’ சின்னம் பெற்று 2024 நாடாளுமன்ற தேர்தலை அணுகி 8.2 சதவீத வாக்குகளை பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

மாநில அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சி, தனக்கு விரும்பிய சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெறலாம். அந்த வகையில் மாநில அங்கீகாரம் பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சி மீண்டும் ஹகரும்பு விவசாயி’ சின்னத்தை கோரினால் எளிதாக கிடைத்துவிடும். நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், கரும்பு விவசாயி சின்னத்தை மீட்டெடுப்போம் என்ற முழுக்கம் நா.த.க-வின் தேர்தல் பிரசாரத்தின்போதே இருந்ததை பார்க்க முடிந்தது.

தொடர்ந்து பேசியவர்கள், “பிரசாரத்தின்போது மைக் சின்னத்தை ஒலிவாங்கி எனச் சொல்ல முடியாமல் ஆங்கிலத்தில் மைக் எனச் சொல்வதை கட்சியினர் துளியும் விரும்பவில்லை” என்கிறார்கள்.

கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசும்போது, “கரும்பு விவசாயி சின்னம் கொள்கைக்கு நெருக்கமானதுதான். ஆனால் அங்கீகாரம் பெற உதவிய சின்னம் மைக்” தான். மேலும் இருபதே நாளில் தமிழ்நாடு முழுக்க மைக் சின்னம் சென்று சேர்ந்திருப்பதால் அதுவே ஒரு அடையாளம்தான். மேலும் வரைவதற்கும் பேச்சு வழக்கில் கொண்டு சேர்ப்பதற்கும் மைக் சின்னம் மிக எளிதாக இருக்கும். எனவே பறிபோன கரும்பு விவசாயி சின்னத்தைவிட வெற்றியை தேடிதந்த மைக் சின்னமே இருக்கட்டும் என்ற பேச்சும் கட்சிக்குள் நிலவுகிறது. இறுதி முடிவை அண்ணன் சீமான்தான் எடுப்பார்” என்றனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!