பிரித்தானியாவை தொடர்ந்து ஜேர்மனியும் வெளியேறுமா?

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய நிலையில், தற்போது அந்த பட்டியலில் ஜேர்மனியும் விரைவில் இணைய வாய்ப்புள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜேர்மனியின் இரண்டாவது பெரிய கட்சியான எஎஃப்டியின்(AFD) தலைவர்களில் ஒருவரான ஏலைஸ் வெய்டல், ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர், “ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறலாமா என பிரித்தானியாவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதேபோன்று ஒரு வாக்கெடுப்பு ஜேர்மனியில் நடத்த வேண்டும்.

பிரித்தானியாவுக்கு பிரெக்சிட் என்றால், நமக்கு ஒரு டெக்சிட் வாக்கெடுப்பு நடத்தலாம்” என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கருத்துக்கு ஜேர்மன் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்டனர், “ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜேர்மன் வெளியேறினால், ஜேர்மன் பொருளாதாரமே அழிந்துவிடும்” என்றார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!