திமுக கொடுக்குமா? கூட்டணி கட்சிகள் கோரிக்கை

மக்களவை தேர்தலிடம் போட்டியிடம் திமுகவிடம் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிக தொகுதிகள் கேட்டுள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் வேலையை தொடங்கிவிட்டன. அதில், குறிப்பாக திமுக தனது கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அந்த வகையில், இன்று(பிப்.4), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை சற்று முன் முடிந்த நிலையில், “கடந்த தேர்தலைவிட இந்த முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த பேச்சுவார்த்தை முடிந்த சில நிமிடங்களில் மதிமுகவுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், கடந்த முறை ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி தங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை 6 இடங்களில் போட்டியிட மதிமுக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!